Thursday, October 7, 2010
முந்திரி பக்கோடா
தேவையானவை;முந்திரி-1\4கிலோ,கடலைமாவு-100கிராம்,புதினா-1கைப்பிடி,(இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்பு)அரைத்த பேஸ்ட்-2டீஸ்பூன்,அரிசிமாவு-3டீஸ்பூன்,ஆயில்-தேவைக்கு,உப்பு
செய்முறை;ஆயில் தவிரமற்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு கெட்டுயாகபிசைந்து ஆயிலில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சாக்லேட்
தேவையாணவை; கண்டன்ஸ்டு மில்க்-2கப்;சர்க்கரை-2டீஸ்பூன்;பட்டர்-250கிராம்;கோகோ பவுடர்-4டீஸ்பூன்;
செய்முறை; கனமான வாணலியில் கண்டன்ஸ்டு மில்க்,சர்க்கரை,பட்டர்,கோகோபவுடர் எல்லாவற்றையும் ஒன்றாககொட்டி நன்குகிளறவும்.எல்லாம்சேர்ந்து நெய்பிரிந்து வரும் சமயத்தில் டிரேயில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.
குறிப்பு;கண்டன்ஸ்டுமில்க் செய்ய; பால் 5கப்,சர்க்கரை 1கப்;
செய்முறை;கனமான வாணலியில் பால்,சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி இட்லிமாவு பதம்வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.ஆறியதும் மிக்ஸியில் விப்பரில் வைத்து ஒரு சுற்றுசுற்றி ஒரு பாக்ஸில் ஊற்றி மூடிவைக்கவும்
நெய் பர்பி
தேவையாணவை;
கடலைமாவு-1கப்;சர்க்கரை-2கப்;நெய்-2கப்;தேங்காய்துருவல்-1கப்;நெய்யில் வருத்த முந்திரி-1\2கப்
செய்முறை; கனமான வாணலியில் நெய்1\4கப் ஊற்றி கடலைமாவை பச்சைவாசனை போகும்வரை வறுத்து தனியாகவைக்கவும்.அதேவாணலியில் சர்க்கரை போட்டு தண்ணீர் முழுகும் அளவு ஊற்றிகரைந்ததும் நெய்யில் வறுத்தகடலைமாவை சிறிதுசிறிதாக போட்டுகட்டியில்லாமல் கிளறி தேங்காய்துருவல் சேர்க்கவும். நன்கு கிளறிநெய் ஊற்றவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வருத்தமுந்திரி சேர்த்து தாம்பாளத்தில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.
தேவையாணவை;
கடலைமாவு-1கப்;சர்க்கரை-2கப்;நெய்-2கப்;தேங்காய்துருவல்-1கப்;நெய்யில் வருத்த முந்திரி-1\2கப்
செய்முறை; கனமான வாணலியில் நெய்1\4கப் ஊற்றி கடலைமாவை பச்சைவாசனை போகும்வரை வறுத்து தனியாகவைக்கவும்.அதேவாணலியில் சர்க்கரை போட்டு தண்ணீர் முழுகும் அளவு ஊற்றிகரைந்ததும் நெய்யில் வறுத்தகடலைமாவை சிறிதுசிறிதாக போட்டுகட்டியில்லாமல் கிளறி தேங்காய்துருவல் சேர்க்கவும். நன்கு கிளறிநெய் ஊற்றவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வருத்தமுந்திரி சேர்த்து தாம்பாளத்தில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.
Monday, October 4, 2010
சந்தவை
புழுங்கள் அரிசி -2டம்ளர்
செய்முறை அரிசியை ஊறவைத்து இட்லி பதத்திற்கு அரைக்கவும் உப்பு ஒரு சிட்டிகை கலந்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வேகவைத்து எடுத்து சந்தவை மணையில் பிழியவும் எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
1.இனிப்பிற்கு வெல்லம் 300 கிராம் வறுத்த எள் 100 கிராம் பொட்டுக்கடலை 100 கிராம்
செய்முறை வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி கொண்டு எள்ளையும் பொட்டுக்கடலையும் மிக்ஸியில் சிறிது சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும் சந்தவை பொடி செய்து வெல்லம் பாகு கலந்து சாப்பிடலாம்
2.காரத்திற்கு;வெங்காயம்-1,ப.மிளகாய்-2,கடுகு,கடலைபருப்பு,உ.பருப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவைக்கு லெமன்-பாதிஅளவு,எண்ணெய்,ம.தூள் சிறிது, உப்பு தேவைக்கு .
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொண்டு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு கல்ல பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு சிவந்த தும் கறிவேப்பிலை போட்டு ம.தூள் உப்பு சேர்த்து கிளறி சந்நவையை போட்டு நன்குகிளறி கடைசியில் லெமன் பிழிந்து நன்கு கிளறி இறக்கவும்.
3.வாணலியில் நெய்சிறிது ஊற்றி தேங்காய்துருவல் 1கப் போட்டு கிளறி சர்க்கரை தூவி முந்திரிசிறிது நெய்யில் வறுத்து போட்டு கிளறி இறக்கவும்.
புழுங்கள் அரிசி -2டம்ளர்
செய்முறை அரிசியை ஊறவைத்து இட்லி பதத்திற்கு அரைக்கவும் உப்பு ஒரு சிட்டிகை கலந்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வேகவைத்து எடுத்து சந்தவை மணையில் பிழியவும் எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
1.இனிப்பிற்கு வெல்லம் 300 கிராம் வறுத்த எள் 100 கிராம் பொட்டுக்கடலை 100 கிராம்
செய்முறை வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி கொண்டு எள்ளையும் பொட்டுக்கடலையும் மிக்ஸியில் சிறிது சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும் சந்தவை பொடி செய்து வெல்லம் பாகு கலந்து சாப்பிடலாம்
2.காரத்திற்கு;வெங்காயம்-1,ப.மிளகாய்-2,கடுகு,கடலைபருப்பு,உ.பருப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவைக்கு லெமன்-பாதிஅளவு,எண்ணெய்,ம.தூள் சிறிது, உப்பு தேவைக்கு .
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொண்டு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு கல்ல பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு சிவந்த தும் கறிவேப்பிலை போட்டு ம.தூள் உப்பு சேர்த்து கிளறி சந்நவையை போட்டு நன்குகிளறி கடைசியில் லெமன் பிழிந்து நன்கு கிளறி இறக்கவும்.
3.வாணலியில் நெய்சிறிது ஊற்றி தேங்காய்துருவல் 1கப் போட்டு கிளறி சர்க்கரை தூவி முந்திரிசிறிது நெய்யில் வறுத்து போட்டு கிளறி இறக்கவும்.
Saturday, October 2, 2010
காதல்
காதல்
அன்பான காதல்
அழகான காதலை
விட அழகானது
காதலை வர்ணிக்காத
கவிஞர்களே இல்லை-ஆனால்
காதல் தோல்வியின் வேதனையை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
காதலுக்காக இறந்தவர்கள் உண்டு
அடுத்தவர்கள் வாழ இறந்த
காதலும் உண்டு
எல்லோருக்கும் முதல்காதல்
இல்லாமல் இருக்கலாம்-ஆனால்
காதலித்தவர்களுக்கு நிச்சயம்
கல்லறைக்கு செல்லும்வரை
இருக்கும்.
தான்மட்டும் வாழதன் குடும்பத்தையே
அழித்த சுயநல காதலும் உண்டு
தன்குடும்பம் வாழதன் அன்பான
காதலை இழந்தவர்களும் உண்டு.
காதலிக்கும்முன் யோசியுங்கள்
காதலித்த பின்கைவிடாமல்
இறுதிவரை வாழுங்கள்
அன்பான காதல்
அழகான காதலை
விட அழகானது
காதலை வர்ணிக்காத
கவிஞர்களே இல்லை-ஆனால்
காதல் தோல்வியின் வேதனையை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
காதலுக்காக இறந்தவர்கள் உண்டு
அடுத்தவர்கள் வாழ இறந்த
காதலும் உண்டு
எல்லோருக்கும் முதல்காதல்
இல்லாமல் இருக்கலாம்-ஆனால்
காதலித்தவர்களுக்கு நிச்சயம்
கல்லறைக்கு செல்லும்வரை
இருக்கும்.
தான்மட்டும் வாழதன் குடும்பத்தையே
அழித்த சுயநல காதலும் உண்டு
தன்குடும்பம் வாழதன் அன்பான
காதலை இழந்தவர்களும் உண்டு.
காதலிக்கும்முன் யோசியுங்கள்
காதலித்த பின்கைவிடாமல்
இறுதிவரை வாழுங்கள்
என் ஆசை
என் ஆசை
இன்னமும் தூங்கி எழுந்தவுடன்
உங்கள் முகத்தில்தான் நான்
கண்விழிக்க ஆசைப்படுகிறேன்
என்றாலும் இப்போதெல்லாம்
தூங்குவதற்கு முன் கொஞ்சநேரம்
உங்களை இமைக்காமல் பார்த்து
விட்டுதான் கண்மூடுகிறேன்
ஒருவேளை தூக்கத்திலேயே என்
உயிர்பிரிந்தால் கடைசியாக நான்
பார்த்தது நீங்களாகதான்
இருக்கவேன்டும்.
இன்னமும் தூங்கி எழுந்தவுடன்
உங்கள் முகத்தில்தான் நான்
கண்விழிக்க ஆசைப்படுகிறேன்
என்றாலும் இப்போதெல்லாம்
தூங்குவதற்கு முன் கொஞ்சநேரம்
உங்களை இமைக்காமல் பார்த்து
விட்டுதான் கண்மூடுகிறேன்
ஒருவேளை தூக்கத்திலேயே என்
உயிர்பிரிந்தால் கடைசியாக நான்
பார்த்தது நீங்களாகதான்
இருக்கவேன்டும்.
தொலைந்த உறவுகள்
தொலைந்த உறவுகள்இன்றும் என் உறவுகளை
தேடுகிறேன் கதை சொல்லி
சாதம் ஊட்டிய என் பாட்டியை
தேர்கடை வீதியில் என்
கையை பிடித்து நடந்த
என் தாத்தாவை
என்னை சைக்கிளில் வைத்து
ஊரெல்லாம் சுற்றிய
என் சித்தப்பாவை
நான் செய்யும் சேட்டைகளை
பார்த்து என்னை மடியில்
தூக்கி கொஞ்சிய
என் பெரியப்பாவை
நான் குறும்பு செய்யும்போது
அதட்டும் அம்மாவை பொய்யாக
திட்டும் என் பெரியம்மாவை
நான் பள்ளிவிட்டு வர
தாமதமானால் வாசலை
பார்த்து பிள்ளையை
இன்னம் காணவில்லை என்று
பரிதவிக்கும் என் சித்தியை
என்னைபோல் என்மருமகள்
என்று பெருமைபடும்
என் அத்தையை
என்னை பாராட்டி சீராட்டி
வளர்த்த என் பெரியப்பா
பிள்ளைகளை
என்மேல் உயிரையே வைக்கும்
என் உடன்பிறப்புகளை
அண்ணன்மனைவியாய் மட்டும்
அல்லாமல் தோழியாய்
இருந்த என் அண்ணியை
இன்ப துன்பத்தில் முதல்
ஆளாய் வந்து நிற்கும் என்
பங்காளி மற்றும் மாமன் மச்சான்களை
மாமாவாக,அண்ணனாக,
சித்தப்பாவாக இருந்து சாதியை
மதத்தை தாண்டி உறவாய்
வாழ்ந்த என் அக்கம்
பக்கத்தினரை
சிறுவயது முதல் என்கை
பிடித்து வாழ்ந்த என்
தோழிகளை
திருவிழா சமயத்தில்
வீட்டையே நிறைக்கும்
உறவுகளும் அவர்களின்
பேச்சுகளையும்,கும்மாளங்களையும்
எங்கே என் உறவுகள்
என்று தொலைத்தேன்-என்
உறவுகளை இன்றும்
தேடுகிறேன் பரபரப்பான
வாழ்க்கையில் இன்னம்
அவர்கள் எனக்கு கிடைக்கவில்லை.
என் சிநேகிதி
என் சிநேகிதி
அன்பு என்ற வார்த்தைக்கு
நட்பு என்றால் நான்
உன்னைதான் கூறுவேன்.
சிநேகிதத்தின் பெருமையை
உன்னால்தான் உணர்ந்தேன்.
உன்னை பார்த்து எத்தனைநாள்
வியந்தேன் உன் நட்பின்
வலிமையை கன்டு.
என் எல்லா உறவுகளின்
முகங்களையும் உன்னில்
கண்டேன் உறவுகளை
மட்டும் அல்ல-என்
உணர்வுகளையும் புரிந்தவள் நீ
நட்பை பற்றி யார்
வேண்டும் என்றாலும் கூறலாம்
யாரிடமும் நட்பு வரலாம்
எந்த வயதிலும் வரலாம்
யார் கூறினாலும்
யாரிடம் வந்தாலும்
எந்த வயதில் வந்தாலும்
நட்பு அழகுதான்.
பள்ளிகூடத்தில் கடலைமிட்டாயும்
கம்மர்கட்டையும் காகா கடிகடித்ததை
தவிர வேறுஎன்ன இருக்கிறது
நட்பை பற்றிகூற என்று கேலி
பேசியவர்கள் மத்தியில்-என்
துக்கத்திலேயும்,மகிழ்ச்சிலேயும்
இன்றுவரை முதல் ஆளாய்
என்னுடன் நிற்பவள் நீ.
மதங்களை,மொழிகளை,
இனங்களை தாண்டிய-நம்
நட்பைபோல் எல்லோருரிடமும்
நட்பாக பழகுவோம்
நட்பை போற்றுவோம்.
அன்பு என்ற வார்த்தைக்கு
நட்பு என்றால் நான்
உன்னைதான் கூறுவேன்.
சிநேகிதத்தின் பெருமையை
உன்னால்தான் உணர்ந்தேன்.
உன்னை பார்த்து எத்தனைநாள்
வியந்தேன் உன் நட்பின்
வலிமையை கன்டு.
என் எல்லா உறவுகளின்
முகங்களையும் உன்னில்
கண்டேன் உறவுகளை
மட்டும் அல்ல-என்
உணர்வுகளையும் புரிந்தவள் நீ
நட்பை பற்றி யார்
வேண்டும் என்றாலும் கூறலாம்
யாரிடமும் நட்பு வரலாம்
எந்த வயதிலும் வரலாம்
யார் கூறினாலும்
யாரிடம் வந்தாலும்
எந்த வயதில் வந்தாலும்
நட்பு அழகுதான்.
பள்ளிகூடத்தில் கடலைமிட்டாயும்
கம்மர்கட்டையும் காகா கடிகடித்ததை
தவிர வேறுஎன்ன இருக்கிறது
நட்பை பற்றிகூற என்று கேலி
பேசியவர்கள் மத்தியில்-என்
துக்கத்திலேயும்,மகிழ்ச்சிலேயும்
இன்றுவரை முதல் ஆளாய்
என்னுடன் நிற்பவள் நீ.
மதங்களை,மொழிகளை,
இனங்களை தாண்டிய-நம்
நட்பைபோல் எல்லோருரிடமும்
நட்பாக பழகுவோம்
நட்பை போற்றுவோம்.
Friday, October 1, 2010
என் உயிர் நீ
என் உயிர் நீ
என்னவனே நீ என்
கண்ணாக இருக்காதே!
கண் இல்லாமல் உன்
பார்வையில் என்னால்
வாழ முடியும்-ஆனால் நீ
என் சுவாசம் -நீ
இல்லாமல்(சுவாசம்)என்னால்
வாழ முடியாது.
நம் திருமணத்திற்கு பிறகு
எனக்கு தனிகாலடி சுவடே
இல்லை ஏன்என்றால்-நான்
உன்னுள் இருக்கும்போது
என் காலடி சுவடு
எப்படி தெரியும்.
நாம் சந்தோஷமாக
இருக்கையில் என்
அருகாமையிலே இருக்கிறாய்
நம் பிரிவின்போது-என்னுள்ளேயே
இருந்து என்னை மகிழ்விக்கிறாய்.
நமக்கு இருகுழந்தைகள் என்றேன்
ஆனால் நீயோ இல்லை-எனக்கு
உன்னுடன் சேர்த்து மூன்று
குழந்தைகள் என்று கூறி
எனக்கு தாயுமானவானாய் ஆனாய்.
நாம் நடந்து வந்தபாதையில்
எவ்வளவோ கஷ்டத்தை கண்டோம்
உன் கைபிடித்ததனால் அத்தனையும்
எனக்கு கஷ்டமாக தெரியவில்லை
நம்திருமணத்திற்கு பிறகு-நான்
அழுததே இல்லை-ஏனெனில்
அழுகை என்ற வார்த்தையே
மறக்கவைத்தவன் நீ.
எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் இருப்பாள் என்பது
உலக நடைமுறை சொல்-என்
சாதனைக்கு பின்னால்-நீ
என்று பெருமையுடன் கூறுவேன்.
கடவுளிடம் ஒருவரம் கேட்பேன்-என்
சாவில் கூடநான் உன்னை விட்டு
பிரியகூடாது-ஏன்னென்றால் சாவில்கூட
உன்னைவிட்டு என்னால் பிரியமுடியாது.
என்னவனே நீ என்
கண்ணாக இருக்காதே!
கண் இல்லாமல் உன்
பார்வையில் என்னால்
வாழ முடியும்-ஆனால் நீ
என் சுவாசம் -நீ
இல்லாமல்(சுவாசம்)என்னால்
வாழ முடியாது.
நம் திருமணத்திற்கு பிறகு
எனக்கு தனிகாலடி சுவடே
இல்லை ஏன்என்றால்-நான்
உன்னுள் இருக்கும்போது
என் காலடி சுவடு
எப்படி தெரியும்.
நாம் சந்தோஷமாக
இருக்கையில் என்
அருகாமையிலே இருக்கிறாய்
நம் பிரிவின்போது-என்னுள்ளேயே
இருந்து என்னை மகிழ்விக்கிறாய்.
நமக்கு இருகுழந்தைகள் என்றேன்
ஆனால் நீயோ இல்லை-எனக்கு
உன்னுடன் சேர்த்து மூன்று
குழந்தைகள் என்று கூறி
எனக்கு தாயுமானவானாய் ஆனாய்.
நாம் நடந்து வந்தபாதையில்
எவ்வளவோ கஷ்டத்தை கண்டோம்
உன் கைபிடித்ததனால் அத்தனையும்
எனக்கு கஷ்டமாக தெரியவில்லை
நம்திருமணத்திற்கு பிறகு-நான்
அழுததே இல்லை-ஏனெனில்
அழுகை என்ற வார்த்தையே
மறக்கவைத்தவன் நீ.
எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னால்
ஒரு பெண் இருப்பாள் என்பது
உலக நடைமுறை சொல்-என்
சாதனைக்கு பின்னால்-நீ
என்று பெருமையுடன் கூறுவேன்.
கடவுளிடம் ஒருவரம் கேட்பேன்-என்
சாவில் கூடநான் உன்னை விட்டு
பிரியகூடாது-ஏன்னென்றால் சாவில்கூட
உன்னைவிட்டு என்னால் பிரியமுடியாது.
Wednesday, September 29, 2010
Tuesday, September 28, 2010
உளுந்து கஞ்சி
உளுந்து கஞ்சி
உளுந்து -1டம்ளர் ,அரிசி-1|4 டம்ளர், முற்றிய தேங்காய்த் துருவல் -2கப் சுக்கு ,ஏலக்காய்தூள் -1டீஸ்பூன், வெல்லம் -350 கிராம் ,தண்ணீர்-2லிட்டர் ,
செய்முறை; உளுந்தையும் ,அரிசியும் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும் தணியாக தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தூளை போட்டு
கரைந்ததும் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும் . நன்கு கொதிவரும்போது தேங்காயை கொட்டி அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளரவும்.20 நிமிடம் நன்கு கிளறி
கஞ்சி பதத்திற்கு வந்ததும் சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.
உளுந்து -1டம்ளர் ,அரிசி-1|4 டம்ளர், முற்றிய தேங்காய்த் துருவல் -2கப் சுக்கு ,ஏலக்காய்தூள் -1டீஸ்பூன், வெல்லம் -350 கிராம் ,தண்ணீர்-2லிட்டர் ,
செய்முறை; உளுந்தையும் ,அரிசியும் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும் தணியாக தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தூளை போட்டு
கரைந்ததும் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும் . நன்கு கொதிவரும்போது தேங்காயை கொட்டி அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளரவும்.20 நிமிடம் நன்கு கிளறி
கஞ்சி பதத்திற்கு வந்ததும் சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.
படித்ததில் பிடித்தது;
படித்ததில் பிடித்தது;
ஆணாய் பிறந்தாலே
ஆளப்பிறந்தவன் என
ஆசை ஆசையாய்
நெஞ்சோடு சேர்த்து
நெஞ்சம் மகிழ்ந்தவளே!-நீ
நினைவிழக்கும் தருணத்தில்
நினைவிருந்தும் வரவில்லை உன் மகன்!
''சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை''யென்று
சாதம் ஊட்டும்போதும்
இறுமாப்பாய் கூறியவளே-உன்
இறுதிச் சடங்கிற்கு
இது வரைக்கும் வரவில்லை!
எனக்கு ஒரு வாயும்
அவனுக்கு இரண்டு வாயும்
சாதம் கொடுத்து
''கடைசிவரை
சோறு போடுபவன் அவனல்லவா''
என கண்ணாய் வளர்த்த உனக்கு
கடைசி நேர வாக்கரிசி போட
காத்திருந்தும் வரவில்லை
வேலை கிடைக்க வேண்டி
விரதம் இருத்து
விளக்கேற்றி, நெய் போட்டு
வீதி வழி வந்தவளை
வீதியில் எடுத்துச் செல்ல
விரைந்து வர மனமில்லை!
நீ கழித்த மலத்தை
நித்தமும் எடுத்து, குளிப்பாட்டி
நீவிரும்பியதை சமைத்து
உனக்கு தாயாய்
ஊன்றுகோலாய் இருந்த
உன் மகளின் உழைப்பதனை
அறியாமலேயே போய் விட்டாயே!
தொண்டைக்குழிக்குள்
தொடாத வானமாய் அங்கே அவன்...
உன் உடலதனை
உண்மையாகத் தாங்கிய பூமியாய்
இங்கே இவள்..
''ஆண்பிள்ளை சிங்கம்'' என்று
ஆதிமுதல் அந்தம்வரை
அடி மனதில் நீவளர்த்த
ஆணாதிக்க அடிமை சிந்தனையை
அடுத்த ஜென்மத்திலாவது
அடியோடு நிறுத்திக்கொள்!
ஆணாய் பிறந்தாலேஆளப்பிறந்தவன் என
ஆசை ஆசையாய்
நெஞ்சோடு சேர்த்து
நெஞ்சம் மகிழ்ந்தவளே!-நீ
நினைவிழக்கும் தருணத்தில்
நினைவிருந்தும் வரவில்லை உன் மகன்!
''சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை''யென்று
சாதம் ஊட்டும்போதும்
இறுமாப்பாய் கூறியவளே-உன்
இறுதிச் சடங்கிற்கு
இது வரைக்கும் வரவில்லை!
எனக்கு ஒரு வாயும்
அவனுக்கு இரண்டு வாயும்
சாதம் கொடுத்து
''கடைசிவரை
சோறு போடுபவன் அவனல்லவா''
என கண்ணாய் வளர்த்த உனக்கு
கடைசி நேர வாக்கரிசி போட
காத்திருந்தும் வரவில்லை
வேலை கிடைக்க வேண்டி
விரதம் இருத்து
விளக்கேற்றி, நெய் போட்டு
வீதி வழி வந்தவளை
வீதியில் எடுத்துச் செல்ல
விரைந்து வர மனமில்லை!
நீ கழித்த மலத்தை
நித்தமும் எடுத்து, குளிப்பாட்டி
நீவிரும்பியதை சமைத்து
உனக்கு தாயாய்
ஊன்றுகோலாய் இருந்த
உன் மகளின் உழைப்பதனை
அறியாமலேயே போய் விட்டாயே!
தொண்டைக்குழிக்குள்
தொடாத வானமாய் அங்கே அவன்...
உன் உடலதனை
உண்மையாகத் தாங்கிய பூமியாய்
இங்கே இவள்..
''ஆண்பிள்ளை சிங்கம்'' என்று
ஆதிமுதல் அந்தம்வரை
அடி மனதில் நீவளர்த்த
ஆணாதிக்க அடிமை சிந்தனையை
அடுத்த ஜென்மத்திலாவது
அடியோடு நிறுத்திக்கொள்!
Saturday, September 25, 2010
படித்ததில் பிடித்தது
என் ஆசை
''தாய்க்குப்பின் தாரம்'' என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்
என் கல்லறையில்
''தாய்க்குப் பின் கணவன்'' என்று
புதியதொரு மொழியை எழுதி
வையுங்கள்.-
''தாய்க்குப்பின் தாரம்'' என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்
என் கல்லறையில்
''தாய்க்குப் பின் கணவன்'' என்று
புதியதொரு மொழியை எழுதி
வையுங்கள்.-
சுற்றுபுற சூழல்
இயற்கை இறைவன் நமக்கு கொடுத்த அழகான பரிசு மட்டும் அல்ல பொக்கிஷமும் கூட. ஆனால் நாம் அதை ரசிப்பதற்கு பதில் அழித்து கொண்டிருக்கிறோம்.காடுகளை நம் தேவைக்கு பயன்படுத்தாமல் நம் சுயநலத்திற்கு பயன்படுத்தி விலங்குகளின் இருப்பிடத்தை அழித்து வருகிறோம். நீர்வளங்களும் இதனால் அழிந்து வருகிறது.விவசாய நிலங்களில் தொழிற்சாலைகளும், ப்ளாட்டுகளும் கட்ட விவசாயத்தை அழிக்கிறோம். மரங்களை அழிப்பதால் சிதேஷ்னநிலை மாறிவருகிறது. இமயமலையில் இருந்து வரும் ஆறுகள் இன்னம் 20 வருடத்தில் வற்றிவிடும் அபாயமும் உள்ளது. பிளாஷ்டிக் பொருட்களினால் மண்வளம் மட்டும் அல்ல நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் அபாயமும் உள்ளது. பைக் கார்களின் பயன்பாட்டினால் ஏற்படும் புகையினால் வரும் ஆபத்தை தவிர்க்க முடிந்தளவு சைக்களை பயன்படுத்தினால் தேவை இல்லாத நோய்கள் நம்மை அண்டாது மட்டும் அல்ல சிறந்த உடற்பயிற்சியும் கூட. தனியாக ஒருவர் அல்லது ஒரு குடும்பம் காரில் செல்வதை தவிர்த்து பேருந்துகளில் சென்றால் எரிபொருளை மிச்சப்படுவதை காப்பதுடன் ஒசோன் படலத்தில் ஏற்படும் ஆபத்தையும் தடுக்க உதவும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் நமக்கு மட்டும் அல்ல நம் சந்ததினரும் நன்மை அடைவார்கள். எலக்ட்ரானிக் பொருட்களை வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுத்து விட்டால் நாம் எவ்வளவே மின்சாரத்தை சேமிக்க முடியும். அன்று நமக்கு ஜீவ நதிகளாய் இருந்த ஆறுகள் இன்று தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர்களை சுமக்கும் கால்வாய்களாக மாறிவருகிறது. நம் குழந்தைகளுக்கு தங்கத்தையும், கரன்ஸிகளையும் சேர்த்து வைப்பதற்கு பதில் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான அமைதியான பசுமையான ஒளிமயமான நீர்வளமுள்ள உலகை தாருவோம். வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கு உதவுவோம். எதிர்கால பசுமையான உலகிற்கு அழைத்து செல்வோம். பசுமை புரட்சியை உருவாக்குவோம். நேற்று என்பது முடிந்தவையாகவே இருக்கட்டும். இன்றே, இப்போதே விழித்தெழுவோம். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். இயற்கைக்கு உதவுவோம். அமைதியை காப்போம்; அனைவரும் அன்புடன் இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்.
திருவாதிரை களி
தேவையானவை:
புழுங்கல் அரிசி-2 டம்ளர்
வெல்லம்-500கிராம்
நெய்-250கிராம்
தேங்காய் துருவல்-2கப்
முந்திரி-100கிராம்
திராட்சை-100கிராம்
ஏலக்காய் தூள்-1டீஸ்பூன்.
குறிப்பு: மார்கழி மாத திருவாதிரை நட்சதிரத்தன்று இதை சிவனுக்கு பிரசாதமாக செய்வார்கள்.
புழுங்கல் அரிசி-2 டம்ளர்
வெல்லம்-500கிராம்
நெய்-250கிராம்
தேங்காய் துருவல்-2கப்
முந்திரி-100கிராம்
திராட்சை-100கிராம்
ஏலக்காய் தூள்-1டீஸ்பூன்.
செய்முறை; அரிசியை 1மணிநேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்திற்கு நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் வெல்லம் தூள் செய்து அதில் போட்டு கரைந்ததும் வடிகட்டி தேங்காய் துருவல் சேர்த்து (இதில் நெய் சிறிது ஊற்றினால் கொதிவரும் போது அடிபிடிக்காது.) பிறகு அரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். அவ்வபோது நெய் சிறிது ஊற்றி 3/4 மணிநேரம் கைவிடாமல் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். இந்த களியை முதல் நாள் இரவு செய்து மறுநாள் சாப்பிடசுவை நன்றாக இருக்கும்.
குறிப்பு: மார்கழி மாத திருவாதிரை நட்சதிரத்தன்று இதை சிவனுக்கு பிரசாதமாக செய்வார்கள்.
Thursday, September 23, 2010
பாதாம் பிஸ்தா குல்ஃபி
தேவையானவை;
திக்கான கிரீம்-ஒரு கப்,பால்-ஒரு லிட்டர், பிரெட் ஸ்லைஸ்-2, சர்க்கரை-ஒரு கப்,முந்திரி,பாதாம்,பிஸ்தா (எல்லாம் சேர்த்து உடைத்தது)-கால் கப்.
செய்முறை;
பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். பால் நன்றாகக் கொதித்து பாதியாகக் குறைந்ததும் ,சர்க்கரை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நன்றாக ஆறவிடவும். மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் லேசாக அடித்துக்கொள்ளவும். சிறிய பானை வடிவிலான குல்ஃபி அச்சுகளில் ஊற்றி,ஃப்ரீஸரில் முதல் நாளிரவே வைத்து விடவும். மறுநாள் நன்றாக செட் ஆகி, சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)




















