Wednesday, September 29, 2010

என்னுடைய கிராமம்


என்னுடைய கிராமத்தில் பாட்டி கூட அழகுதான்

என்னுடைய கிராமம்

எனக்கு பிடித்த கிராமவாழ்க்கை

Tuesday, September 28, 2010

உளுந்து கஞ்சி

உளுந்து கஞ்சி
உளுந்து -1டம்ளர் ,அரிசி-1|4 டம்ளர், முற்றிய தேங்காய்த் துருவல் -2கப் சுக்கு ,ஏலக்காய்தூள் -1டீஸ்பூன், வெல்லம் -350 கிராம் ,தண்ணீர்-2லிட்டர் ,
செய்முறை; உளுந்தையும் ,அரிசியும் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும் தணியாக தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தூளை போட்டு
கரைந்ததும் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும் . நன்கு கொதிவரும்போது தேங்காயை கொட்டி அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளரவும்.20 நிமிடம் நன்கு கிளறி
கஞ்சி பதத்திற்கு வந்ததும் சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.

படித்ததில் பிடித்தது;

படித்ததில் பிடித்தது;
ஆணாய் பிறந்தாலே
ஆளப்பிறந்தவன் என
ஆசை ஆசையாய்
நெஞ்சோடு சேர்த்து
நெஞ்சம் மகிழ்ந்தவளே!-நீ
நினைவிழக்கும் தருணத்தில்
நினைவிருந்தும் வரவில்லை உன் மகன்!

''சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை''யென்று
சாதம் ஊட்டும்போதும்
இறுமாப்பாய் கூறியவளே-உன்
இறுதிச் சடங்கிற்கு
இது வரைக்கும் வரவில்லை!


எனக்கு ஒரு வாயும்
அவனுக்கு இரண்டு வாயும்
சாதம் கொடுத்து
''கடைசிவரை
சோறு போடுபவன் அவனல்லவா''
என கண்ணாய் வளர்த்த உனக்கு
கடைசி நேர வாக்கரிசி போட
காத்திருந்தும் வரவில்லை

வேலை கிடைக்க வேண்டி
விரதம் இருத்து
விளக்கேற்றி, நெய் போட்டு
வீதி வழி வந்தவளை
வீதியில் எடுத்துச் செல்ல
விரைந்து வர மனமில்லை!

நீ கழித்த மலத்தை
நித்தமும் எடுத்து, குளிப்பாட்டி
நீவிரும்பியதை சமைத்து
உனக்கு தாயாய்
ஊன்றுகோலாய் இருந்த
உன் மகளின் உழைப்பதனை
அறியாமலேயே போய் விட்டாயே!
தொண்டைக்குழிக்குள்
தொடாத வானமாய் அங்கே அவன்...
உன் உடலதனை
உண்மையாகத் தாங்கிய பூமியாய்
இங்கே இவள்..

''ஆண்பிள்ளை சிங்கம்'' என்று
ஆதிமுதல் அந்தம்வரை
அடி மனதில் நீவளர்த்த
ஆணாதிக்க அடிமை சிந்தனையை
அடுத்த ஜென்மத்திலாவது
அடியோடு நிறுத்திக்கொள்!

Saturday, September 25, 2010

படித்ததில் பிடித்தது

என் ஆசை
''தாய்க்குப்பின் தாரம்'' என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்
என் கல்லறையில்
''தாய்க்குப் பின் கணவன்'' என்று
புதியதொரு மொழியை எழுதி
வையுங்கள்.-

சுற்றுபுற சூழல்



இயற்கை ரசியுங்கள், இயற்கையுடன் ஒன்றிவாமுங்கள்


இயற்கை இறைவன் நமக்கு கொடுத்த அழகான பரிசு மட்டும் அல்ல பொக்கிஷமும் கூட. ஆனால் நாம் அதை ரசிப்பதற்கு பதில் அழித்து கொண்டிருக்கிறோம்.காடுகளை நம் தேவைக்கு பயன்படுத்தாமல் நம் சுயநலத்திற்கு பயன்படுத்தி விலங்குகளின் இருப்பிடத்தை அழித்து வருகிறோம். நீர்வளங்களும் இதனால் அழிந்து வருகிறது.விவசாய நிலங்களில் தொழிற்சாலைகளும், ப்ளாட்டுகளும் கட்ட விவசாயத்தை அழிக்கிறோம். மரங்களை அழிப்பதால் சிதேஷ்னநிலை மாறிவருகிறது. இமயமலையில் இருந்து வரும் ஆறுகள் இன்னம் 20 வருடத்தில் வற்றிவிடும் அபாயமும் உள்ளது. பிளாஷ்டிக் பொருட்களினால் மண்வளம் மட்டும் அல்ல நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் அபாயமும் உள்ளது. பைக் கார்களின் பயன்பாட்டினால் ஏற்படும் புகையினால் வரும் ஆபத்தை தவிர்க்க முடிந்தளவு சைக்களை பயன்படுத்தினால் தேவை இல்லாத நோய்கள் நம்மை அண்டாது மட்டும் அல்ல சிறந்த உடற்பயிற்சியும் கூட. தனியாக ஒருவர் அல்லது ஒரு குடும்பம் காரில் செல்வதை தவிர்த்து பேருந்துகளில் சென்றால் எரிபொருளை மிச்சப்படுவதை காப்பதுடன் ஒசோன் படலத்தில் ஏற்படும் ஆபத்தையும் தடுக்க உதவும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் நமக்கு மட்டும் அல்ல நம் சந்ததினரும் நன்மை அடைவார்கள். எலக்ட்ரானிக் பொருட்களை வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுத்து விட்டால் நாம் எவ்வளவே மின்சாரத்தை சேமிக்க முடியும். அன்று நமக்கு ஜீவ நதிகளாய் இருந்த ஆறுகள் இன்று தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவு நீர்களை சுமக்கும் கால்வாய்களாக மாறிவருகிறது. நம் குழந்தைகளுக்கு தங்கத்தையும், கரன்ஸிகளையும் சேர்த்து வைப்பதற்கு பதில் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான அமைதியான பசுமையான ஒளிமயமான நீர்வளமுள்ள உலகை தாருவோம். வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கு உதவுவோம். எதிர்கால பசுமையான உலகிற்கு அழைத்து செல்வோம். பசுமை புரட்சியை உருவாக்குவோம். நேற்று என்பது முடிந்தவையாகவே இருக்கட்டும். இன்றே, இப்போதே விழித்தெழுவோம். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம். இயற்கைக்கு உதவுவோம். அமைதியை காப்போம்; அனைவரும் அன்புடன் இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்.

திருவாதிரை களி

தேவையானவை:
புழுங்கல் அரிசி-2 டம்ளர்
வெல்லம்-500கிராம்
நெய்-250கிராம்
தேங்காய் துருவல்-2கப்
முந்திரி-100கிராம்
திராட்சை-100கிராம்
ஏலக்காய் தூள்-1டீஸ்பூன்.

செய்முறை; அரிசியை 1மணிநேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்திற்கு நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் வெல்லம் தூள் செய்து அதில் போட்டு கரைந்ததும் வடிகட்டி தேங்காய் துருவல் சேர்த்து (இதில் நெய் சிறிது ஊற்றினால் கொதிவரும் போது அடிபிடிக்காது.) பிறகு அரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். அவ்வபோது நெய் சிறிது ஊற்றி 3/4 மணிநேரம் கைவிடாமல் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். இந்த களியை முதல் நாள் இரவு செய்து மறுநாள் சாப்பிடசுவை நன்றாக இருக்கும்.

குறிப்பு: மார்கழி மாத திருவாதிரை நட்சதிரத்தன்று இதை சிவனுக்கு பிரசாதமாக செய்வார்கள்.

Thursday, September 23, 2010



 பாதாம் பிஸ்தா குல்ஃபி
தேவையானவை; 
        
      திக்கான கிரீம்-ஒரு கப்,பால்-ஒரு லிட்டர், பிரெட் ஸ்லைஸ்-2, சர்க்கரை-ஒரு கப்,முந்திரி,பாதாம்,பிஸ்தா (எல்லாம் சேர்த்து உடைத்தது)-கால் கப். 
செய்முறை;
      
      பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். பால் நன்றாகக் கொதித்து பாதியாகக் குறைந்ததும் ,சர்க்கரை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நன்றாக ஆறவிடவும். மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து  மிக்ஸியில் லேசாக அடித்துக்கொள்ளவும். சிறிய பானை வடிவிலான குல்ஃபி அச்சுகளில் ஊற்றி,ஃப்ரீஸரில் முதல் நாளிரவே வைத்து விடவும். மறுநாள் நன்றாக செட் ஆகி, சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

-நன்றி ''அவள் விகடன் ஏப்ரல் 27,2007''