தொலைந்த உறவுகள்இன்றும் என் உறவுகளை
தேடுகிறேன் கதை சொல்லி
சாதம் ஊட்டிய என் பாட்டியை
தேர்கடை வீதியில் என்
கையை பிடித்து நடந்த
என் தாத்தாவை
என்னை சைக்கிளில் வைத்து
ஊரெல்லாம் சுற்றிய
என் சித்தப்பாவை
நான் செய்யும் சேட்டைகளை
பார்த்து என்னை மடியில்
தூக்கி கொஞ்சிய
என் பெரியப்பாவை
நான் குறும்பு செய்யும்போது
அதட்டும் அம்மாவை பொய்யாக
திட்டும் என் பெரியம்மாவை
நான் பள்ளிவிட்டு வர
தாமதமானால் வாசலை
பார்த்து பிள்ளையை
இன்னம் காணவில்லை என்று
பரிதவிக்கும் என் சித்தியை
என்னைபோல் என்மருமகள்
என்று பெருமைபடும்
என் அத்தையை
என்னை பாராட்டி சீராட்டி
வளர்த்த என் பெரியப்பா
பிள்ளைகளை
என்மேல் உயிரையே வைக்கும்
என் உடன்பிறப்புகளை
அண்ணன்மனைவியாய் மட்டும்
அல்லாமல் தோழியாய்
இருந்த என் அண்ணியை
இன்ப துன்பத்தில் முதல்
ஆளாய் வந்து நிற்கும் என்
பங்காளி மற்றும் மாமன் மச்சான்களை
மாமாவாக,அண்ணனாக,
சித்தப்பாவாக இருந்து சாதியை
மதத்தை தாண்டி உறவாய்
வாழ்ந்த என் அக்கம்
பக்கத்தினரை
சிறுவயது முதல் என்கை
பிடித்து வாழ்ந்த என்
தோழிகளை
திருவிழா சமயத்தில்
வீட்டையே நிறைக்கும்
உறவுகளும் அவர்களின்
பேச்சுகளையும்,கும்மாளங்களையும்
எங்கே என் உறவுகள்
என்று தொலைத்தேன்-என்
உறவுகளை இன்றும்
தேடுகிறேன் பரபரப்பான
வாழ்க்கையில் இன்னம்
அவர்கள் எனக்கு கிடைக்கவில்லை.
0 comments:
Post a Comment