Tuesday, September 28, 2010

படித்ததில் பிடித்தது;

படித்ததில் பிடித்தது;
ஆணாய் பிறந்தாலே
ஆளப்பிறந்தவன் என
ஆசை ஆசையாய்
நெஞ்சோடு சேர்த்து
நெஞ்சம் மகிழ்ந்தவளே!-நீ
நினைவிழக்கும் தருணத்தில்
நினைவிருந்தும் வரவில்லை உன் மகன்!

''சாண் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளை''யென்று
சாதம் ஊட்டும்போதும்
இறுமாப்பாய் கூறியவளே-உன்
இறுதிச் சடங்கிற்கு
இது வரைக்கும் வரவில்லை!


எனக்கு ஒரு வாயும்
அவனுக்கு இரண்டு வாயும்
சாதம் கொடுத்து
''கடைசிவரை
சோறு போடுபவன் அவனல்லவா''
என கண்ணாய் வளர்த்த உனக்கு
கடைசி நேர வாக்கரிசி போட
காத்திருந்தும் வரவில்லை

வேலை கிடைக்க வேண்டி
விரதம் இருத்து
விளக்கேற்றி, நெய் போட்டு
வீதி வழி வந்தவளை
வீதியில் எடுத்துச் செல்ல
விரைந்து வர மனமில்லை!

நீ கழித்த மலத்தை
நித்தமும் எடுத்து, குளிப்பாட்டி
நீவிரும்பியதை சமைத்து
உனக்கு தாயாய்
ஊன்றுகோலாய் இருந்த
உன் மகளின் உழைப்பதனை
அறியாமலேயே போய் விட்டாயே!
தொண்டைக்குழிக்குள்
தொடாத வானமாய் அங்கே அவன்...
உன் உடலதனை
உண்மையாகத் தாங்கிய பூமியாய்
இங்கே இவள்..

''ஆண்பிள்ளை சிங்கம்'' என்று
ஆதிமுதல் அந்தம்வரை
அடி மனதில் நீவளர்த்த
ஆணாதிக்க அடிமை சிந்தனையை
அடுத்த ஜென்மத்திலாவது
அடியோடு நிறுத்திக்கொள்!

0 comments:

Post a Comment