Thursday, October 7, 2010

முந்திரி பக்கோடா


தேவையானவை;முந்திரி-1\4கிலோ,கடலைமாவு-100கிராம்,புதினா-1கைப்பிடி,(இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்பு)அரைத்த பேஸ்ட்-2டீஸ்பூன்,அரிசிமாவு-3டீஸ்பூன்,ஆயில்-தேவைக்கு,உப்பு

செய்முறை;ஆயில் தவிரமற்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு கெட்டுயாகபிசைந்து ஆயிலில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சாக்லேட்


தேவையாணவை; கண்டன்ஸ்டு மில்க்-2கப்;சர்க்கரை-2டீஸ்பூன்;பட்டர்-250கிராம்;கோகோ பவுடர்-4டீஸ்பூன்;
செய்முறை; கனமான வாணலியில் கண்டன்ஸ்டு மில்க்,சர்க்கரை,பட்டர்,கோகோபவுடர் எல்லாவற்றையும் ஒன்றாககொட்டி நன்குகிளறவும்.எல்லாம்சேர்ந்து நெய்பிரிந்து வரும் சமயத்தில் டிரேயில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.

குறிப்பு;கண்டன்ஸ்டுமில்க் செய்ய; பால் 5கப்,சர்க்கரை 1கப்;
செய்முறை;கனமான வாணலியில் பால்,சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி இட்லிமாவு பதம்வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.ஆறியதும் மிக்ஸியில் விப்பரில் வைத்து ஒரு சுற்றுசுற்றி ஒரு பாக்ஸில் ஊற்றி மூடிவைக்கவும்
நெய் பர்பி
தேவையாணவை;
கடலைமாவு-1கப்;சர்க்கரை-2கப்;நெய்-2கப்;தேங்காய்துருவல்-1கப்;நெய்யில் வருத்த முந்திரி-1\2கப்
செய்முறை; கனமான வாணலியில் நெய்1\4கப் ஊற்றி கடலைமாவை பச்சைவாசனை போகும்வரை வறுத்து தனியாகவைக்கவும்.அதேவாணலியில் சர்க்கரை போட்டு தண்ணீர் முழுகும் அளவு ஊற்றிகரைந்ததும் நெய்யில் வறுத்தகடலைமாவை சிறிதுசிறிதாக போட்டுகட்டியில்லாமல் கிளறி தேங்காய்துருவல் சேர்க்கவும். நன்கு கிளறிநெய் ஊற்றவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வருத்தமுந்திரி சேர்த்து தாம்பாளத்தில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.

Monday, October 4, 2010

சந்தவை
புழுங்கள் அரிசி -2டம்ளர்
செய்முறை அரிசியை ஊறவைத்து இட்லி பதத்திற்கு அரைக்கவும் உப்பு ஒரு சிட்டிகை கலந்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வேகவைத்து எடுத்து சந்தவை மணையில் பிழியவும் எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
1.இனிப்பிற்கு வெல்லம் 300 கிராம் வறுத்த எள் 100 கிராம் பொட்டுக்கடலை 100 கிராம்
செய்முறை வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி கொண்டு எள்ளையும் பொட்டுக்கடலையும் மிக்ஸியில் சிறிது சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும் சந்தவை பொடி செய்து வெல்லம் பாகு கலந்து சாப்பிடலாம்
2.காரத்திற்கு;வெங்காயம்-1,ப.மிளகாய்-2,கடுகு,கடலைபருப்பு,உ.பருப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவைக்கு லெமன்-பாதிஅளவு,எண்ணெய்,ம.தூள் சிறிது, உப்பு தேவைக்கு .
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொண்டு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு கல்ல பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு சிவந்த தும் கறிவேப்பிலை போட்டு ம.தூள் உப்பு சேர்த்து கிளறி சந்நவையை போட்டு நன்குகிளறி கடைசியில் லெமன் பிழிந்து நன்கு கிளறி இறக்கவும்.
3.வாணலியில் நெய்சிறிது ஊற்றி தேங்காய்துருவல் 1கப் போட்டு கிளறி சர்க்கரை தூவி முந்திரிசிறிது நெய்யில் வறுத்து போட்டு கிளறி இறக்கவும்.

Saturday, October 2, 2010

காதல்

காதல்

அன்பான காதல்
அழகான காதலை
விட அழகானது

காதலை வர்ணிக்காத
கவிஞர்களே இல்லை-ஆனால்
காதல் தோல்வியின் வேதனையை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

காதலுக்காக இறந்தவர்கள் உண்டு
அடுத்தவர்கள் வாழ இறந்த
காதலும் உண்டு

எல்லோருக்கும் முதல்காதல்
இல்லாமல் இருக்கலாம்-ஆனால்
காதலித்தவர்களுக்கு நிச்சயம்
கல்லறைக்கு செல்லும்வரை
இருக்கும்.

தான்மட்டும் வாழதன் குடும்பத்தையே
அழித்த சுயநல காதலும் உண்டு
தன்குடும்பம் வாழதன் அன்பான
காதலை இழந்தவர்களும் உண்டு.

காதலிக்கும்முன் யோசியுங்கள்
காதலித்த பின்கைவிடாமல்
இறுதிவரை வாழுங்கள்

என் ஆசை

என் ஆசை

இன்னமும் தூங்கி எழுந்தவுடன்
உங்கள் முகத்தில்தான் நான்
கண்விழிக்க ஆசைப்படுகிறேன்
என்றாலும் இப்போதெல்லாம்
தூங்குவதற்கு முன் கொஞ்சநேரம்
உங்களை இமைக்காமல் பார்த்து
விட்டுதான் கண்மூடுகிறேன்
ஒருவேளை தூக்கத்திலேயே என்
உயிர்பிரிந்தால் கடைசியாக நான்
பார்த்தது நீங்களாகதான்
இருக்கவேன்டும்.

தொலைந்த உறவுகள்

தொலைந்த உறவுகள்

இன்றும் என் உறவுகளை
தேடுகிறேன் கதை சொல்லி
சாதம் ஊட்டிய என் பாட்டியை

தேர்கடை வீதியில் என்
கையை பிடித்து நடந்த
என் தாத்தாவை

என்னை சைக்கிளில் வைத்து
ஊரெல்லாம் சுற்றிய
என் சித்தப்பாவை

நான் செய்யும் சேட்டைகளை
பார்த்து என்னை மடியில்
தூக்கி கொஞ்சிய
என் பெரியப்பாவை

நான் குறும்பு செய்யும்போது
அதட்டும் அம்மாவை பொய்யாக
திட்டும் என் பெரியம்மாவை

நான் பள்ளிவிட்டு வர
தாமதமானால் வாசலை
பார்த்து பிள்ளையை
இன்னம் காணவில்லை என்று
பரிதவிக்கும் என் சித்தியை

என்னைபோல் என்மருமகள்
என்று பெருமைபடும்
என் அத்தையை

என்னை பாராட்டி சீராட்டி
வளர்த்த என் பெரியப்பா
பிள்ளைகளை

என்மேல் உயிரையே வைக்கும்
என் உடன்பிறப்புகளை

அண்ணன்மனைவியாய் மட்டும்
அல்லாமல் தோழியாய்
இருந்த என் அண்ணியை

இன்ப துன்பத்தில் முதல்
ஆளாய் வந்து நிற்கும் என்
பங்காளி மற்றும் மாமன் மச்சான்களை

மாமாவாக,அண்ணனாக,
சித்தப்பாவாக இருந்து சாதியை
மதத்தை தாண்டி உறவாய்
வாழ்ந்த என் அக்கம்
பக்கத்தினரை

சிறுவயது முதல் என்கை
பிடித்து வாழ்ந்த என்
தோழிகளை

திருவிழா சமயத்தில்
வீட்டையே நிறைக்கும்
உறவுகளும் அவர்களின்
பேச்சுகளையும்,கும்மாளங்களையும்

எங்கே என் உறவுகள்
என்று தொலைத்தேன்-என்
உறவுகளை இன்றும்
தேடுகிறேன் பரபரப்பான
வாழ்க்கையில் இன்னம்
அவர்கள் எனக்கு கிடைக்கவில்லை.